பட்ஜெட் 2019: விலை குறையும், உயரும் பொருட்கள்!

செய்திகள்
Updated Jul 05, 2019 | 14:59 IST | Times Now

இந்த பட்ஜெட்டால் விலை குறையப் பொருட்கள் என்ன. உயரப்போகும் பொருட்கள் எவை என்பதை பார்க்கலாம்.

விலை குறையும், உயரும் பொருட்கள்
விலை குறையும், உயரும் பொருட்கள்  |  Photo Credit: Times Now

புதுடெல்லி; நாடாளுமன்ற மக்களவையில் இன்று 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நம்பிக்கை இருந்தால் வழி பிறக்கும், காற்றைப் பயன்படுத்திகூட விளக்கு எரியும் என்ற வரிகளுடன் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தொடங்கினார். 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டால் விலை குறையப் பொருட்கள் என்ன. உயரப்போகும் பொருட்கள் எவை என்பதை பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்கவரி ஒரு சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதம் அதிகரிப்பட்டுள்ளது. இதனால், தங்கம் மற்றும் பெட்ரோல் விலை மேலும் உயர்கிறது. இதேபோல், வெள்ளியின் விலையும் அதிகரிக்கிறது.

விலை அதிரிக்கும் சில பொருட்கள்;

1) பெட்ரோல்- டீசல்

2) தங்கம்-வெள்ளி

3) முந்திரி பருப்பு

4) வாகன உதிரிபாகங்கள்

5) செயற்கை ரப்பர்

6) பிவிசி பைப்கள்

7) டைல்ஸ்

8) புகையிலைப் பொருட்கள்

9) வெள்ளி அணிகலன்கள்

10) சில்வர் பொருட்கள்

11) சிசிடிவி கேமரா

12) உலோகத்தாலான வீட்டுப் பொருட்கள்

13) ஸ்பீக்கர்கள்

14) வீடியோ ரிக்கார்டர்

15) வாகன ஒலிப்பான்கள்

16) சிகரெட்


விலை குறையும் சில பொருட்கள்;

1) மின்சார வாகனங்கள்

2) வீடு வாங்குவது

3) சோப்

4) பேஸ்ட்

5) வாஷிங் பவுடர்

6) மின்விசிறி

7) விளக்குகள்

8) டிராவல் பேக்குகள்

9) சானிட்டரி நாப்கின்கள்

10) பிளாஸ்டிக் பாட்டில்கள்

11) கண்ணாடிகள்

12) மூங்கில் பொருட்கள்

13) தேங்காய்

14) கம்பளி


 

NEXT STORY
பட்ஜெட் 2019: விலை குறையும், உயரும் பொருட்கள்! Description: இந்த பட்ஜெட்டால் விலை குறையப் பொருட்கள் என்ன. உயரப்போகும் பொருட்கள் எவை என்பதை பார்க்கலாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola