மேற்குவங்க வன்முறை: பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் பரஸ்பரம் சரமாரி குற்றச்சாட்டு!

செய்திகள்
Updated May 15, 2019 | 17:00 IST | Times Now

மேற்குவங்க வன்முறை தொடர்பாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டியுள்ளன.

பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டு
பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டு  |  Photo Credit: ANI

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா நடத்திய பேரணியில் வன்முறை வெடித்த நிலையில், பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மாநிலத்தில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசே முழு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய படைகள் இல்லாவிட்டால், தானும் காயம் அடையாமல் அங்கிருந்து தப்பியிருக்க முடியாது என அமித்ஷா தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓபரைன், பேரணியின் போது பாரதிய ஜனதா வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வன்முறையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்குவங்க மாநிலத்தில் நடத்தவிருந்த பேரணி ரத்துசெய்யப்பட்டது. பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அடித்து நொறுக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. மேற்குவங்க சம்பவங்களில் மற்றொரு திருப்பமாக பாரதிய ஜனதா இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளரான பிரியங்கா சர்மா அலிப்பூரில் உள்ள சீர்திருத்த மையத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 

மேற்குவங்க முதலமைச்சர் குறித்து மீம்ஸ் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட பிரியங்கா சர்மாவை விடுதலை செய்தாததற்காக உச்சநீதிமன்றம் மம்தா பானர்ஜிக்கு இன்று காலை எச்சரிக்கை விடுத்திருந்தது.

NEXT STORY
மேற்குவங்க வன்முறை: பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் பரஸ்பரம் சரமாரி குற்றச்சாட்டு! Description: மேற்குவங்க வன்முறை தொடர்பாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டியுள்ளன.
Loading...
Loading...
Loading...