ஆட்டம் காண்கிறதா மம்தாவின் ஆட்சி? மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் கால் பதிக்கும் பாஜக!

செய்திகள்
Updated May 23, 2019 | 15:09 IST | Times Now

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியினிடையே கடுமையான தேர்தல் கால போர்கள் நடைபெற்றன.

election 2019, தேர்தல் 2019
மம்தா பானர்ஜி  |  Photo Credit: Times Now

கொல்கத்தா: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் வட மாநிலங்கள் முழுவதிலும் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னணியில் உள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் அரசியல் கோட்டையான மேற்கு வங்கத்தையும் இந்த முறை பாஜக தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற சந்தேகம் நிலவுகிறது. அந்தளவிற்கு வாக்கு எண்ணிக்கையில் இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு இருக்கின்றன. 

17வது மக்களவைக்கான ஆட்சிக் கட்டிலில் அமரப் போகும் கட்சியை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் அதிகளவில் வாக்குகள் பதிவான மாநிலம் மேற்கு வங்கம். அதிகளவிலான வன்முறைகள் வெடித்த மாநிலமும் இதுதான். இங்கு அமைந்திருந்த 42 மக்களவை தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியினிடையே கடுமையான தேர்தல் கால போர்கள் நடைபெற்றன. நாளொரு புகார், பொழுதொரு வார்த்தைப் போர் என தேர்தல் ஆணையத்தையே கதி கலங்க அடித்தனர் இரண்டு தரப்பினரும். 

நடுவில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அமித்ஷா பங்கேற்ற போது, இருகட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. அது வன்முறையாக வலுப்பெற்றது. இதன் உச்சமாக மேற்கு வங்க தலைவரான ஈஸ்வர் வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. ஆனால், இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி அங்கு கிட்டதட்ட 80% வாக்குகள் பதிவாகின. 

கடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசியது. அதிலும் கூட மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிக் கனியைப் பெற முடிந்தது. ஆனால், இந்த முறை இரட்டை இலக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு டஃப் ஃபைட் கொடுத்து வருகிறது பிஜேபி. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூடாரமாக இருந்த அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. 

இதனால், இதுவரை தனிப்பெரும்பான்மை கட்சியாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செலுத்தி வந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு இது பலத்த அடி. குறைந்தது 20 தொகுதிகளையாவது பாஜக கைப்பற்றிவிட்டால், மேற்கு வங்கத்திலும் பாஜக வலுவாக கால் பதிப்பது உறுதியாகிறது.  இந்நிலையில், ‘தோல்வியடையும் எல்லாரும் தோல்வியாளர்கள் அல்ல’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
ஆட்டம் காண்கிறதா மம்தாவின் ஆட்சி? மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் கால் பதிக்கும் பாஜக! Description: மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியினிடையே கடுமையான தேர்தல் கால போர்கள் நடைபெற்றன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!