சசிகலா சிறையில் இருந்து வெளியேறியது உறுதி; பெங்களூரு சிறையில் ஆயுதங்கள் பறிமுதல்

செய்திகள்
Updated Oct 09, 2019 | 14:43 IST | Times Now

சசிகலா சிறையிலிருந்து வெளியேறியதும், அவருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதும் உறுதியாகியுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Sasikala, சசிகலா
சசிகலா  |  Photo Credit: PTI

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விதிகளை மீறி வெளியே சென்றது உண்மை என விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அன்றைய சிறைத்துறை டிஐஜி ரூபா அளித்த புகார் உண்மை எனவும் தெரியவந்துள்ளது.

சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், விதிகளை மீறி சிறையிலிருந்து வெளியே சென்றதாகவும், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் காவல்துறை அதிகாரி ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ரூபாவின் புகார்கள் குறித்து ஆய்வு செய்த ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சசிகலா சிறையை விட்டு வெளியே சென்றது உண்மை தான் என்றும், சிறையில் அவருக்கு பிரத்யேகமாக உணவு சமைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் 37 கத்திகள், ஆயுதங்கள், செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் போதை இழுக்க பயன்படும் கருவிகளை கைப்பற்றினர்.

Prison knives

40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரப்பன அக்ரஹாரா சிறையில் 4,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளபோதும் சிறைச்சாலையில் போதியளவு பணியாட்கள் இல்லை என தெரிகிறது.

சிறைச்சாலையில் போதை பொருட்களின் புழக்கம் அதிம் உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து இன்று மேற்கொண்ட திடீர் ஆய்வில், காவல்துறையினர் இவற்றை கைப்பற்றினர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...