இந்தியா புதிய உயரங்களை தொடப் போகிறது: பிரதமர் மோடிக்கு விராட் கோலி சொன்ன வாழ்த்து!

செய்திகள்
Updated May 24, 2019 | 18:03 IST | Times Now

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Virat Kohli congratulate Prime Minister Narendra Modi on BJP's win in Lok Sabha Elections 2019
Virat Kohli congratulate Prime Minister Narendra Modi on BJP's win in Lok Sabha Elections 2019  |  Photo Credit: AP

டெல்லி: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

17-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே-19 வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. 542 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 303 இடங்களில் வெற்றி பெற்று பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். 

தேர்தலில் அதிக இடங்களில் வென்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பல பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உலக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வாழ்த்துகள் நரேந்திர மோடிஜி. உங்கள் தொலைநோக்குப் பார்வையால் இந்தியா பல்வேறு புதிய உயரங்களைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று வாழ்த்துக் கூறியிருக்கிறார். 

அதேபோல், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

NEXT STORY
இந்தியா புதிய உயரங்களை தொடப் போகிறது: பிரதமர் மோடிக்கு விராட் கோலி சொன்ன வாழ்த்து! Description: பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...