மேற்குவங்கத்தில் தொடரும் வன்முறை: 12 மணி நேர பந்த்திற்கு பாஜக அழைப்பு!

செய்திகள்
Updated Jun 10, 2019 | 12:14 IST | Times Now

மேற்குவங்க மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் பஷிரத் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி 12 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது

மேற்குவங்கத்தில் 12 மணி நேர பந்த்திற்கு பாஜக அழைப்பு
மேற்குவங்கத்தில் 12 மணி நேர பந்த்திற்கு பாஜக அழைப்பு  |  Photo Credit: PTI

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் பஷிரத் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி 12 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேற்குவங்கத்தில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராகுல் சின்ஹா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் இந்த பந்த் நடைபெற்று வருகிறது.

பஷிரத் மாவட்டத்தில் இன்று 12 மணி நேர பந்திற்கு பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்றும், மாநிலம் முழுவதும் கருப்பு தினம் அனுசரிக்கப்படுவதாகவும் ராகுல் சின்ஹா தெரிவித்தார். மேலும், வன்முறையில் போலீசாருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க நீதிமன்றத்தை அனுக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வன்முறையில் உயிரிழந்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு இறுதி மரியாதை செலுத்த கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ராகுல் சின்ஹா கூறினார்.

வன்முறையில் உயிரிழந்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த நேற்றிரவு கொல்கத்தா எடுத்து செல்லும்போது, பாசந்தி தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், கொதிப்படைந்த பாரதிய ஜனதா கட்சியினர், உயிரிழந்தவர்களின் உடல்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே தகனம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். 

பின்னர், கட்சியின் மூத்த நிர்வாகிகள் தலையிட்டதை அடுத்து, அந்த முடிவு கைவிடப்பட்டது. வன்முறையைக் கண்டிக்கும் வகையில், இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களுக்கும், பந்த்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அளித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி அரசு, பஷிரத் வன்முறை பாரதிய ஜனதா கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 
 

NEXT STORY
மேற்குவங்கத்தில் தொடரும் வன்முறை: 12 மணி நேர பந்த்திற்கு பாஜக அழைப்பு! Description: மேற்குவங்க மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் பஷிரத் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி 12 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles