செல்போனால் வந்த விபரீதம்...பாம்புகள் மீது அமர்ந்த பெண் மரணம்!

செய்திகள்
Updated Sep 12, 2019 | 13:59 IST | Times Now

செல்போனில் கணவருடன் பேசியபடி, படுக்கையில் பாம்புகள் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது அமர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்புகள் மீது அமர்ந்த பெண்,  மரணம்,UP women hooked in her phone sits on snakes and dies after being bitten
பாம்புகள் மீது அமர்ந்த பெண் மரணம்  |  Photo Credit: Times Now

உத்தரப்பிரதேசம்: செல்போனில் தனது கணவருடன் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர், படுக்கையில் பாம்புகள் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் கீதா என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் பணிபுரிகிறார். இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வார்கள். அதே போல் தன் கணவருடன் கீதா சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்த போது, படுக்கையில் இரண்டு பாம்புகள் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது அமர்ந்துள்ளார். இதனால் ஆக்ரோஷம் அடைந்த அந்த பாம்புகள் கீதாவை கொத்தியுள்ளது.

இதையடுத்து மயக்கம் அடைந்த கீதாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கீதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கீதாவின் குடும்பத்தினர்கள் வீட்டிற்கு சென்றபோது அந்த பாம்புகள் இன்னும் படுக்கையிலேயே இருந்துள்ளது. கோபம் அடைந்த கீதாவின் குடும்பத்தினர்கள் அந்த பாம்புகளை அடித்து கொன்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தை பற்றி கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், அந்த இரண்டு பாம்புகளும் இனசேர்க்கையில் ஈடுபட்டுக்  கொண்டிருந்தபோது கீதா அமர்ந்ததால் பாம்புகள் அவரை கொத்தியதாக தெரிவித்துள்ளார்.   

செல்போனில் மதிமயங்கியபடி பலர் விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ரயில்கள் முன்னாள் செல்பி எடுக்கும் போதும், அதிக சத்தத்துடன் ஹெட்செட் அணிந்து செல்லும்போதும், வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்லும் போதும் விபத்துகள் நடந்துள்ளன. இருப்பினும் படுக்கையில் பாம்பு இருப்பதை கூட கவனிக்காத வண்ணம் இந்த பெண் உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...