வருடத்துக்கு 60 லட்சம் வருமானம்! கச்சோரி வியாபாரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

செய்திகள்
Updated Jun 25, 2019 | 16:47 IST | ANI

அலிகார் பகுதியில் உள்ள கச்சோரி கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது

Mukesh Kachori Bandhar
முகேஷ் கச்சோரி பந்தர்  |  Photo Credit: ANI

உத்தரபிரதேசம் அலிகார் பகுதியில் உள்ள 'முகேஷ் கச்சோரி பந்தர்' எனும் கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. சாதாரண கடையான இதில் ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் வியாபாரம் நடைபெறுகிறது என தெரியவந்துள்ளது.

இந்த கடையின் உரிமையாளர் முகேஷ் 12 ஆண்டுகளுக்கு முன் இந்த கடையை தொடங்கியுள்ளார். இவர் கச்சோரி, சமோசா ஆகியவற்றை விற்பனை செய்துவருகிறார். இவரின் கச்சோரி, சமோசா அந்த பகுதி மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனாலேயே நாள்தோறும் இவர் கடையில் கூட்டம் அலைமோதும். 

இந்நிலையில் வருமான வரித்துறையினருக்கு வந்த தகவல் படி அவர்கள் முகேஷின் கடைக்கு அருகில் அமர்ந்து அந்த கடையின் வியாபாரத்தை ட்ராக் செய்துள்ளனர். இவரது ஒரு நாள் வருமானத்தைக் கணக்கிட்டு இதன் மூலம் அவர் ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் வியாபாரம் செய்கிறார் என்று தெரிய வந்துள்ளது. பின்னர் வருமான வரித்துறையினர் முகேஷின் கடையை சோதனை செய்தனர். இதன்படி அவர் முறையாக வரி கட்டாததும், ஜி.எஸ்.டி ஆக்ட் படி அவர் தன் கடையை பதிவு செய்யாததும் தெரிய வந்துள்ளது. 

 

 

இந்த கடையின் உரிமையாளர் முகேஷ் தனக்கு ஜி.எஸ்.டி பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எனவும், அவர் வாழ்வாதாரத்திற்காவே இந்த கடையை ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு இதை பற்றியெல்லாம் யாரும் கூறவில்லை என்று முன்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வருமான வரிதுறையினர் முறைப்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இந்த வழக்கை விசாரித்தவர் முகேஷ் தன் வருமானத்தை ஒப்புக்கொண்டதகாவும், தன் கடையின் எரிபொருள், மூலப்பொருள் ஆகியவற்றின் செலவு குறித்த விபரமும் தந்துள்ளதாக கூறியுள்ளார்.              

NEXT STORY
வருடத்துக்கு 60 லட்சம் வருமானம்! கச்சோரி வியாபாரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் Description: அலிகார் பகுதியில் உள்ள கச்சோரி கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles