கல்லூரி முதல் நாடாளுமன்றம் வரை.. அருண் ஜெட்லி நினைவலைகள் !

செய்திகள்
Updated Aug 24, 2019 | 14:37 IST

கல்லூரி காலத்தில் இருந்தே அரசியல் அதிக ஈடுபாடு கொண்டு, நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அருண் ஜெட்லி.

Union minister Arun Jaitley
Union minister Arun Jaitley  |  Photo Credit: PTI

டெல்லி: 5 முறை மத்திய நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

 

 • 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர்.
 • டெல்லி ஸ்ரீராம் கல்லூரில் பி.காம் பட்டம் பெற்றார். பின்னர் 1977 -ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
 • பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் உறுப்பினராக இருந்தார்.
 • பாஜக உருவாக்கப்பட்டபோது அதில் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டவர் அருண் ஜெட்லி.
 • இந்திரகாந்தி அவசர நிலையை அமல்படுத்திய போது 19 மாதங்கள் அருண் ஜெட்லி சிறையிலடைக்கப்பட்டார்.
 • 1982-ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
 • 1987 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர்.
 • 1989-ல் அருண் ஜெட்லியை கூடுதல் ஜொலிசிட்டர் ஜெனரலாக அப்போதைய பிரதமர் வி.பி. சிங் நியமித்தாா்.
 • 1991 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானார்.
 • நீண்ட காலமாக பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர்.
 • 1999-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
 • 2000-ஆம் ஆண்டில் சட்டத்துறை மற்றும் கம்பெனி விவகாரங்களை கவனித்து வந்தார்.
 • 2009 -ஆம் ஆண்டு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர்.
 • 2014 -ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
 • 2017- ஆண் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தபடுத்த முக்கிய காரணமானவர்.
 • லோக்பால் சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டம் இயற்றியதில் ஜெட்லியின் பங்கு முக்கியமானது.
 • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் 2014 முதல் 2019 வரை நிதி அமைச்சராக இருந்தார்.
 • 2018-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வானவர்.
 • 5 முறை மத்திய நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்தவர் அருண் ஜெட்லி.
 • பணமதிப்பு நீக்கத்தின்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.
 • நிதித்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றியவர்.
   
NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...