பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

செய்திகள்
Updated Oct 20, 2019 | 11:29 IST | Times Now

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. 

Two Indian soldiers killed in ceasefire violation
file photo  |  Photo Credit: BCCL

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் மற்றும் பொதுமக்கள் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குல் சம்பவங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

கடந்த 13 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டம் உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டாா். இந்நிலையில் ஒரே வாரத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவம் இன்று நிகழ்த்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEXT STORY