மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் சட்ட மசோதா!

செய்திகள்
Updated Jul 30, 2019 | 19:09 IST | Times Now

இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

Triple talaq bill passed in Rajya Sabha
Triple talaq bill passed in Rajya Sabha  |  Photo Credit: IANS

இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும் எதிராக 84 பேரும்  வாக்களித்தனர்.  

இன்று முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் வழக்கத்தால் பெண்கள் நடுத்தெருவில் விடப்படக் கூடாது என்றும் இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலானவற்றில் தடை செய்யப்பட்ட வழக்கத்தை இந்தியாவில் எதிர்ப்பது ஏன் என்று தெரியல்லை, இந்த மசோதா மனிதநேயம் மகளிரின் கவுரவத்துடன் தொடர்புடையது என்றும் கூறினார்.

மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் 4 மணிநேரம் இது பற்றிய விவாதத்துக்குப் பிறகு 5:10 மணிக்கு வாக்கு எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி அளித்தார். அப்போது முத்தலாக் கூறும் இஸ்லாமியக் கணவரை கிரிமினல் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இடது சாரி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மக்களவையில் முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவு அளித்த அதிமுக இன்று மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவில் சில பிரிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதபடி உள்ளதாகக் கூறிய அதிமுக உறுப்பினர்கள் 10 பேரும் அவையை வெளிநடப்பு செய்தனர். இவர்களைப் போலவே ராஷ்ட்ரிய சமிதி, பிஎஸ்பி, தெலுங்கு தேசம் கட்சியினரும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். இறுதியில் மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும் எதிராக 84 பேரும்  வாக்களித்ததால், இறுதியில் முத்தலாக் தடை சட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

 

 

NEXT STORY
மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் சட்ட மசோதா! Description: இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles