பாஜக ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் - பிரதமர் மோடி

செய்திகள்
Updated Apr 20, 2019 | 12:18 IST | Times Now

ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், சிறு வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Pm Narendra modi, பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி 

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வர்த்தகர் சங்க கூட்டமைப்பின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசுகையில்," கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வணிகர்களின் வாழ்வாதாரம் உயரவும், வணிகர்கள் கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.  உங்களின் கடின உழைப்பு என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. வணிகர்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு.  உங்களின் பங்களிப்பு இல்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது. 

 முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் வணிகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தொழில் தொழில் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும். வர்த்தகர்களுக்கு எந்த பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும் என குறிப்பிட்டார். 

மேலும், பேசிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் 1 லட்சம் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தில் கடனை உடனடியாக வழங்கி வருகிறோம். வர்த்தகர்களுக்கு ரூ.1 கோடி வரையிலான கடனை வெறும் 59 நிமிடத்தில் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.  ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், 60 வயதிற்கு மேற்பட்ட சிறு வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், கிஸான் கிரெடிட் கார்டு ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

NEXT STORY
பாஜக ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் - பிரதமர் மோடி Description: ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், சிறு வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...