இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு

செய்திகள்
Updated Apr 24, 2019 | 11:25 IST | Times Now

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

Toll in Sri Lanka blasts Toll rises to 310
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310 ஆக உயர்வு   |  Photo Credit: AP

கொழும்பு: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நெகோம்போ புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்கிளப்பு இவாஞ்சலின் தேவலாலயம் ஆகிய 3 தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையின் போது ஞாயிற்றுக்கிழமை காலை அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், பிரார்த்தனைக்காக கூடியிருந்த பொது மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 4 நட்சத்திர விடுதிகளிலும் தற்கொலை தாக்குல் நடத்தப்பட்டது. மொத்தம் 8 இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 359 பேரில் 39 பேர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது. 17 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.

NEXT STORY
இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு Description: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading...
Loading...
Loading...