தமிழகத்தில் நீட்டுக்கு விலக்களிக்க வலியுறுத்தி உள்ளோம் - முதல்வர்

செய்திகள்
Updated Jun 15, 2019 | 22:23 IST | Times Now

சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும்  என்று பிரதமரிடம் மனு அளித்ததாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்

Edappadi Palaniswami met PM Modi
Edappadi Palaniswami met PM Modi  |  Photo Credit: Twitter

மோடி 2-வது முறையாக பிரதமர் பதவியேற்றபின் நடக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதி குறித்தும், வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார்.  தற்போது கூட்டம் முடிந்து சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் எவற்றை பற்றியெல்லாம் மனு அளிக்கப்பட்டது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

 

தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளோம்.மேலும் இது சம்பந்தமாக கர்நாடகாவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். கோதாவை காவிரி நதிகள் இணைப்பை நிறைவேற்ற கோரிக்கை மனு அளித்துள்ளோம், நடந்தாய் வாழி காவிரி திட்டம் மூலம் காவிரி நதி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுள்ளோம், குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் நிதி நிலுவையை உடனடியாக ஒதுக்கக் கோரிக்கை வைத்துள்ளோம், சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும். 

NEXT STORY
தமிழகத்தில் நீட்டுக்கு விலக்களிக்க வலியுறுத்தி உள்ளோம் - முதல்வர் Description: சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும்  என்று பிரதமரிடம் மனு அளித்ததாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola