டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாஜக கூட்டணி 306, காங்கிரஸ் கூட்டணி 132, மற்றவை 104

செய்திகள்
Updated May 19, 2019 | 19:15 IST | S.Karthikeyan

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Times Now-VMR Exit Poll 2019 Results
Times Now-VMR Exit Poll 2019 Results   |  Photo Credit: Times Now

டெல்லி: டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர்  இணைந்து நடத்திய மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக தலைமையிலான கூட்டணி 306 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே- 19 வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி,  பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 132 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 104 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

NEXT STORY
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்: பாஜக கூட்டணி 306, காங்கிரஸ் கூட்டணி 132, மற்றவை 104 Description: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles