ஜம்மு-காஷ்மீர்: என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

செய்திகள்
Updated May 16, 2019 | 11:13 IST | Times Now

ஜம்மு- காஷ்மீர் புல்வாமா பகுதியில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Representational image
Representational image   |  Photo Credit: PTI

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் புல்வாமா மாவட்டம், தலிபோரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.

அதிகாலை முதல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பாதுகாப்பு கருதி புல்வாமா மாவட்டத்தில் அதிகளவு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

NEXT STORY
ஜம்மு-காஷ்மீர்: என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை Description: ஜம்மு- காஷ்மீர் புல்வாமா பகுதியில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles