இலங்கை குண்டுவெடிப்பு: பலியானவர்களில் 3 பேர் இந்தியர்கள்; அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்!

செய்திகள்
Updated Apr 21, 2019 | 20:56 IST | Times Now

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 207 பேர் உயிரிழந்ததாகவும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

sri lanka, இலங்கை
சுஷ்மா சுவராஜ்  |  Photo Credit: PTI

டெல்லி: இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் சிக்கி 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ``இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரான எச்.இ.திலக் மரப்பானாவுடன் சற்று முன்னர் தொடர்பு கொண்டு நான் பேசினேன்.

அப்போது அவர், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 207 பேர் உயிரிழந்ததாகவும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இத்தாக்குதல் சம்பவத்தில் 3 இந்திய பிரஜைகள் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனை கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளதாக இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. மேலும், அவர்களது பெயர்கள் முறையே லட்சுமி (முதலில் லோகஷ்னி என்று சொல்லப்பட்டது),  நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை வெளியுறவுத்துறை ஆணையம் விசாரித்து வருகிறது.

இலங்கைக்கு மனிதநேய அடிப்படையிலான எந்தவொரு உதவியையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக இலங்கை அமைச்சரிடம் நான் தெரிவித்துள்ளேன். தேவைப்பட்டால் மருத்துவ குழுக்களையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்தியா தயாராக உள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார். 

NEXT STORY
இலங்கை குண்டுவெடிப்பு: பலியானவர்களில் 3 பேர் இந்தியர்கள்; அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்! Description: இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 207 பேர் உயிரிழந்ததாகவும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Loading...
Loading...
Loading...