கடைசி நேர திக்திக், இறுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன்!

செய்திகள்
Updated May 24, 2019 | 09:01 IST | Times Now

திமுக கூட்டணி வேட்பாளர், விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

thirumavalavan
திருமாவளவன்  |  Photo Credit: Times of India

நேற்று வெளியானது மக்களவைத் தேர்தல் முடிவுகள். அதில் பா.ஜ.க இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. சிதம்பரம் தொகுதியில் மட்டும் நள்ளிரவையும் தாண்டி முடிவுகள் வெளியிடப்படவில்லை. தனித்தொகுதியான இங்கு திமுக சார்பில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார்.  அவருக்கும் அதிமுக வேட்பஆளர் சந்திரசேகருக்கும் காலையில் இருந்தே கடும் போட்டி நிலவியது. 

இருவரும் ஒவ்வொரு சுற்று முடிந்ததும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர்.   இரவு 11 மணிக்கு மேல் சிறிது சிறிதாக திருமாவளவனின் வாக்குகள் அதிகரிக்கத்தொடங்கியது. இறுதியாக நள்ளிரவு ஒரு மணி வரையிலும் சுமார் மூவாயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தபோதும் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இழுபறி இருந்துகொண்டே இருந்தது. இறுதியாக 2 மணிக்குமேல் அவர் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். நள்ளிரவு வரை பரபரப்பாக சென்ற இந்த வாக்குபதிவுக்குப் பின் தொல். திருமாவளவன் மக்களுக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘’சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற வைத்த மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன். 5,00,229 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஒரு மகத்தான வெற்றி, மாபெரும் வெற்றி. எனவே, லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை விட அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டி 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். சனாதன சக்திகள் என்னை தோற்கடிக்க 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள், எனக்கெதிரான அவதூறு பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டார்கள். அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர்களும் மிகக்கடுமையாக உழைத்து இந்த வெற்றியை ஈட்டித்தந்திருகிறார்கள். ‘’ என்று கூறினார். 

மேலும், ‘’அண்ணன் தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், வாக்களித்த யாவருக்கும், என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். இந்த வெற்றி அறத்திற்கு கிடைத்த வெற்றி, மக்களுடைய வெற்றி. ஏற்கனவே நாங்கள் அறிவித்ததை போல சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமளவு வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் எடுபடவில்லை. தமிழக மக்கள் வழங்கியிருக்கிற இந்த தீர்ப்பு தமிழ்மண்ணில் சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இடமில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசைவழியில் பயணித்தாலும் தமிழகம் எப்போதும் சமூக நீதியின் வழியில் அறத்தின் வழியில் பயணிக்கும் என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது.’’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

 

NEXT STORY
கடைசி நேர திக்திக், இறுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன்! Description: திமுக கூட்டணி வேட்பாளர், விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!