இது போட்டோஷாப் அல்ல! அமெரிக்காவில் மலையை சுற்றித் தவழும் சுனாமி மேகங்கள்!

செய்திகள்
Updated Jun 20, 2019 | 17:08 IST | Times Now

அமெரிக்காவில் மலை மூகடுகளை சுற்றி மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் இந்த அற்புதக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்காவில் மலையை சுற்றித் தவழும் சுனாமி மேகங்கள்
அமெரிக்காவில் மலையை சுற்றித் தவழும் சுனாமி மேகங்கள்  |  Photo Credit: Facebook

விர்ஜினியா: மலை மூகடுகளை சுற்றி மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் இந்த அற்புதக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள மலைத் தொடரின் மீது மேகக் கூட்டங்கள் தவழ்ந்து செல்கின்றன. வீடுகளும், மரங்களும் அதில் மூழ்கியிருப்பது போன்ற அற்புதமான காட்சி இது. இது ஒரு அரிய நிகழ்வு என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விர்ஜினியாவில் உள்ள ஸ்மித் மலையில் தோன்றிய இந்த காட்சியை எமி கிறிஸ்டி ஹண்டர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். " மிகக் குளுமையான மேகங்கள் ஸ்மித் மலையின் மீது தவழ்ந்து செல்கின்றன. இந்த மேகங்கள் சுனாமி மேகங்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த போட்டோவை உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பினேன். வானிலை ஆராய்ச்சியாளர்கள், இது ஒரு மிக அரியது என பதில் அனுப்பியுள்ளனர்" என பேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலத்தில் இரண்டு வெவ்வெறு வாயு மண்டலங்கள் இருவேறு வேகத்தில் பயணிக்கும்போது இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவது கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் இன்ஸ்டெபிலிட்டி என அழைக்கப்படுகிறது. கீழே உள்ள வாயு மண்டலத்தைவிட வேகமாக மேலடுக்கு நகரும்போது இதுபோன்று சூழன்று செல்லும் மேகங்கள் உருவாகின்றன. இது மேகங்களை மட்டும் உள்ளிடக்கிய நிகழ்வு அல்ல.

இணையதளத்தில் வைரலாக பரவி வரும் இந்த போட்டோவுக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 

NEXT STORY
இது போட்டோஷாப் அல்ல! அமெரிக்காவில் மலையை சுற்றித் தவழும் சுனாமி மேகங்கள்! Description: அமெரிக்காவில் மலை மூகடுகளை சுற்றி மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் இந்த அற்புதக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola