வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: பிரதமர் மோடி

செய்திகள்
Updated Apr 23, 2019 | 11:11 IST | Times Now

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

PM Modi casting his vote in Ahmedabad
பிரதமர் மோடி அகமதாபாத்தில் வாக்களித்தார்  |  Photo Credit: Twitter

அகமதாபாத்: வெடிகுண்டை விட வாக்காளர் அடையாள அட்டைக்கு வலிமை அதிகம் என பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் வாக்களித்த பின்னர் தெரிவித்தார்.

17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை இரண்டு கட்டமாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மே 19-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று 3-வது கட்டமாக குஜராத், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதிக்கு உட்பட்ட அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் ராணிப்பில் உள்ள நிஸான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

இதனையெடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி," வாக்களித்ததன் மூலம் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். கும்பமேளாவில் புனித நீராடி தூய்மை அடைவதை போல வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் அதை உணரலாம். தீவிரவாதிகளின் ஆயுதம் வெடிகுண்டு, அந்த வெடிகுண்டை விட வாக்காளர் அடையாள அட்டைக்கு வலிமை அதிகம். இதனால் அதன் வலியைமைய உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சூலே, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நடிகை ஜெயப்பிரதா, மத்திய அமைச்சர் மேனகா காந்தி மகன் வருண் காந்தி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். ஏழு கட்டத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். 
 

NEXT STORY
வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: பிரதமர் மோடி Description: மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...