அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது - நிர்மலா சீதாராமன்

செய்திகள்
Updated Aug 23, 2019 | 18:40 IST | ET Now

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

finance minister Nirmala Sitharaman, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  |  Photo Credit: AP

டெல்லி: அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலக அளவிலே பொருளாதாரம் மந்தநிலையில் தான் உள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி 3.2% என்ற அளவிலேயே உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறானது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட பொருதார சரிவை சந்தித்து வருகின்றன.

அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் தான் உள்ளது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் சந்தித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. வருமான வரி தாக்கல் செய்யும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளன.  ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...