முதன் முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்!

செய்திகள்
Updated May 19, 2019 | 17:01 IST | Times Now

7-ம் கட்டமாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் தனித்தனியாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

 தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்
தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்  |  Photo Credit: ANI

பாட்னா: பீகாரில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன் முறையாக தங்களது வாக்கை பதிவு செய்தனர்

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் இத்தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.  

பீகாரில் 8, ஹிமாச்சல பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, மேற்கு வங்கத்தில் 9, பஞ்சாப்பில் 13, மத்தியபிரதேசத்தில் 8, உத்தரப்பிரதேசத்தில் 13, சண்டீகரில் 1 தொகுதி என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் பீகாரில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன் முறையாக தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். சபா மற்றும் பஃராஹ் என்ற இரு சகோதரிகள் பிறக்கும் போதே தலை ஒட்டிய நிலையில் பிறந்துள்ளனர். 19 வயதை பூர்த்தி செய்த அவர்கள் இன்று பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் முதன் முறையாக தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

 

 

இந்தத் தேர்தலில்  இருவருக்கும் தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இருவரும் தனித்தனியாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

NEXT STORY
முதன் முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்! Description: 7-ம் கட்டமாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் தனித்தனியாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles