தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 4 எம்.பி.க்கள் விலகல்: சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல்!

செய்திகள்
Updated Jun 20, 2019 | 22:28 IST | Times Now

தெலுங்கு தேசம் கட்சியில் கட்சியில் பிரச்சனை வெடிக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 4 எம்.பி.க்கள் விலகல்
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 4 எம்.பி.க்கள் விலகல்  |  Photo Credit: ANI

புதுடெல்லி: தெலுங்கு தேசம் கட்சியில் கட்சியில் பிரச்சனை வெடிக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கட்சியிலிருந்து விலகியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ்.செளத்திரி, பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். மற்றொரு மாநிலங்களவை உறுப்பினரான டி.ஜி.வெங்கடேஷூம் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்குதேசம் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். நான் ஏபிவிபி அமைப்பின் உறுப்பினராகவும். பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவிலும் பணியாற்றியுள்ளேன் என தெலுங்குதேசம் கட்சியில இருந்து விலகியுள்ள வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

எனினும், தெலுங்குதேசம் கட்சியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுஜானா செளத்ரி, சி.எம்.ரமேஷ், கரிகாப்டி மோகன் ராவ் மற்றும் சீதா ராஜலட்சுமி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பில் உள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் உள்ள 25 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே தெலுங்குதேசம் கட்சி வெற்றிபெற்றது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் 23 இல் மட்டுமே வெற்றிபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றிபெற்று ஆந்திராவில் ஆட்சி அமைத்துள்ளது.

NEXT STORY
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 4 எம்.பி.க்கள் விலகல்: சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல்! Description: தெலுங்கு தேசம் கட்சியில் கட்சியில் பிரச்சனை வெடிக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola