நான் ஆந்திர கவர்னரா? - சுஸ்மா ஸ்வராஜ் மறுப்பு

செய்திகள்
Updated Jun 11, 2019 | 07:55 IST | Times Now

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் சுஸ்மா ஸ்வராஜ் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டும் செய்திருந்தார்.

sushma swaraj
சுஸ்மா ஸ்வராஜ்  |  Photo Credit: IANS

நேற்று ஆந்திர பிரதேச ஆளுநராக சுஸ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று செய்தி வெளியானது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூற, அந்த செய்தி வதந்தி என சுஸ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார். 

நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்துக்கு மாநிலங்களவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 176 இடங்களில் 151 இடங்களை வென்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவின் முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். போலவே மக்ககளவைத் தேர்தலில் பா.ஜ.க தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஸ்மா ஸ்வராஜுக்கு உடல் நலக்க் குறைபாடு காரணமாக இந்த முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. 

இந்நிலையில் ஆந்திராவுக்கு கவர்னராக சுஸ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் சுஸ்மா ஸ்வராஜ் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டும் செய்திருந்தார். இப்படி பலரும் வாழ்த்துக்கூறிய நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுஸ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார்.

NEXT STORY
நான் ஆந்திர கவர்னரா? - சுஸ்மா ஸ்வராஜ் மறுப்பு Description: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் சுஸ்மா ஸ்வராஜ் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டும் செய்திருந்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!