சுஷ்மா சுவராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

செய்திகள்
Updated Aug 07, 2019 | 17:34 IST | Times Now

சுஷ்மா சுவராஜின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது

சுஷ்மா சுவராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
சுஷ்மா சுவராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்  |  Photo Credit: ANI

நேற்று உடல் நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 67.

இதனையடுத்து அவரது உடல் மருத்துவமையில் இருந்து இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது. காலை 11 மணி வரை அவரது உறவினர்கள் நண்பர்கள் அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், பா.ஜ.க தலைமை அலுவலகத்திக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின் மாலை 3 மணி வரை, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

அவரின் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர். அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியா காந்தி உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதற்கு முன்னதாக மருத்துவமனையில் ராஜ்நாத் சிங், ரவிஷங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், குலாம் நபி ஆசாத் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின் மாலையில் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லி லோதி ரோடு மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

Image

Image

Image

Image

 

 

NEXT STORY
சுஷ்மா சுவராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் Description: சுஷ்மா சுவராஜின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...