சபரிமலை, ரஃபேல் உள்பட மூன்று முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

செய்திகள்
Updated Nov 14, 2019 | 07:49 IST | Times Now

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சில நாட்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், மூன்று முக்கிய வழக்குகளில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

Sabarimala temple
Sabarimala temple   |  Photo Credit: PTI

டெல்லி: முக்கியத்துவம் வாய்ந்த சபரிமலை வழக்கு மற்றும் ரஃபேல் போர் விமான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதேபோல் பிரதமரை ராகுல் காந்தி விமர்சித்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியாகிறது. 

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

இதுபோல் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை  என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்தும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கிலும் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

இந்த இரண்டு வழக்குகள் தவிர "காவலாளியே திருடன்" என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியாகிறது. முக்கியத்துவம் வாய்ந்த மூன்று வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEXT STORY