பத்திரிகையாளரை உடனடியாக ஜாமீனில் விடுவிடுக்க உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

செய்திகள்
Updated Jun 11, 2019 | 12:22 IST | Times Now

உத்தரப்பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ்யாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பத்திரிகையாளரை விடுவிடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பத்திரிகையாளரை விடுவிடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு  |  Photo Credit: PTI

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜ்யாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக பிரசாந்த் கனோஜ்யாவை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

யோகி ஆதித்யநாத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாக கனோஜ்யா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.  சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், பெண் ஒருவர் முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்னர் நின்றுகொண்டு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஓராண்டு காலம் வீடியோ காலிங் மூலம் பேசிவிட்டு, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த நிற்பது போன்ற பதிவிட்டிருந்தார். 

இந்த வீடியோவை வெளியிட்ட செய்தி தொலைக்காட்சியின் தலைவரும், மற்றொரு தனியார் செய்தி தொலைக்காட்சியின் எடிட்டரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு  ஆறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, மேலும் 4 பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் பத்திரைகையாளர் பிரசாந்த் கனோஜ்யாவை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரப்பிரதேச நீதிமன்றம், அம்மாநில போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த சுதந்திரத்தை மறுக்கும் செயல் எனத் தெரிவித்தது. கனோஜ்யாவின் டிவிட்களை ஏற்றுக்கொள்ள வில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய மாநில போலீசாருக்கு உத்தரவிட்டனர். கனோஜ்யா மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்காக அவர் மீது உத்தரப்பிரதேச போலீசார் எடுத்த நடுவடிக்கை சற்று கடினமானது எனத் தெரிவித்தனர். 
 

NEXT STORY