வைகோ எம்.பி பதவிக்கு தகுதியானவரா என்று ஆய்வு செய்யுங்கள் - சுப்ரமணியன் சுவாமி கடிதம்

செய்திகள்
Updated Jul 17, 2019 | 10:59 IST | Times Now

மாநிலங்களவை பதவிக்கு வைகோ தகுதியானவர்தானா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

subramanian swamy
subramanian swamy  |  Photo Credit: PTI

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது போடப்பட்ட வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது தேசத் துரோக வழக்கில் அவருக்கு 10000 அபராதமும் ஓராண்டு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வைகோ மேல்முறையீடு செய்து அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில்தான் திமுக சார்பாக ராஜ்யசபா எம்.பியாக வைக்கோ பரிந்துரைக்கப்பட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனால் பா.ஜ.க தரப்பில் இருந்து வைகோவை ராஜ்யசபா எம்.பியாக அவரை தேர்ந்தெடுத்தது தவறு என்று எதிர்ப்பு கிளம்பியது. நேற்று முன் தினம் இது சம்பந்தமான பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வி.கோபால் சாமி என்கிற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர். கிறிஸ்துவ மிஷனரி கொள்கையுடைய இவர் ராஜ்ய சபாவுக்குள் நுழைவது இந்தியா கலாச்சாரத்தை சீர்குளைப்பதற்காகவே இருக்கும் என்று மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். 

 

 

மீண்டும் நேற்று துணை குடியரசுத் தலைவரும் ராஜ்யசபாவின் சேர்மேனுமாகிய வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்த நாட்டை அவமானப் படுத்தும் வகையில் இந்தி மொழியையும், சமஸ்கிருத மொழியையும் கொச்சைப் படுத்தியுள்ளார். இவரை ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்வது குறித்து தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக ராஜ்யசபா ஒழுங்குக்குழு ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...