நேபாளம், அருணாச்சலில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

செய்திகள்
Updated Apr 24, 2019 | 11:02 IST | Times Now

இவைத் தவிர திபெத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. 

Strong earthquakes hits Arunachal Pradesh and nepal
நேபாள், அருணாச்சலில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!  |  Photo Credit: Thinkstock

புதன்கிழமை அதிகாலை அருணாச்சல் பிரதேசத்திலும் நேபாளத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நேபால் தலைநகரம் காத்மண்டுவில் காலை 6.14 மணிக்கு ஏற்பட்ட  நிலநடுக்கத்தின் அளவு 4.8 ஆகப் பதிவானது. அதன்பிறகு நௌபிஸ் பகுதியில் 6.29 மணிக்கு 5.2 ரிக்டர் அளவுகோலும் 6.40 மணிக்கு 4.3 அளவுகோலும் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பயத்தில் உள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டுதான் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 8,000 மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சல் பிரதேசத்தில் மேற்கு சியாங்கில் இன்று அதிகாலை 1.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்தியாவின் முகக் குறைந்த மக்கள் தொகைக் கொண்ட மாநிலம் இதுதான் என்றாலும் இங்கும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறார். இருப்பினும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்றாலும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவைத் தவிர திபெத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. 

NEXT STORY
நேபாளம், அருணாச்சலில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! Description: இவைத் தவிர திபெத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles