ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

செய்திகள்
Updated May 10, 2019 | 08:39 IST | Times Now

ஜப்பான் வானியல் நிலையம் சுனாமி பற்றி பயப்படவேண்டாம் என தெரிவித்துள்ளது

Strong earthquake hits Miyazaki-shi, Japan, no tsunami threat
photo credit earthquake.usgs.gov 

இன்று அதி காலையில் தெற்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான் அதிகாரிகள் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 24 கி.மீ ஆழத்தில், மியாசகி நகரத்தின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தூரத்தில் பசிபிக் கடல்களில் காலை 8.48 மணியளவில் (2348 GMT வியாழக்கிழமை) ஏற்பட்டது.

 ஜப்பான் வானியல் நிலையம் சுனாமி பற்றி பயப்படவேண்டாம் என தெரிவித்துள்ளது. அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து 5.1 ரிக்டர் அளவில், 9:07 am (0007 GMT) மீண்டும் அதே இடத்தில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டு இருக்கிறது.

உள்ளூர் ஊடகங்கள் இதுவரை மியாசகி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் பற்றி இன்னும் தெரிவிக்கவில்லை.  ஜப்பான் பூமியின் நான்கு டெக்டோனிக் பலகைகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் அங்கே நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. 

NEXT STORY
ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் Description: ஜப்பான் வானியல் நிலையம் சுனாமி பற்றி பயப்படவேண்டாம் என தெரிவித்துள்ளது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles