மே-23 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் - கடிதம் அனுப்பிய சோனியா காந்தி

செய்திகள்
Updated May 15, 2019 | 09:24 IST | Times Now

மே 23-ஆம் தேதி அன்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவெடுத்திருக்கும் சோனியா காந்தி கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துள்ளார்.

sonia gandhi invites opposition parties for may 23 meeting
sonia gandhi invites opposition parties for may 23 meeting  |  Photo Credit: PTI

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி ஏழு கட்டங்களாக நாடுமுழுவதும் நடந்துவருகிறது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில், 19-ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவும் அதனைத் தொடர்ந்து 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. 

இதனால் தேர்தல் முடிவுகள் முடிந்ததும் ஆட்சி அமைப்பது குறித்து அரசியல் தலைவர்கள் தற்போதே ஆலோசனை நடத்தத் தொடங்கிவிட்டனர். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரர் ராவ் உள்ளிட்ட  மாநிலக்கட்சி தலைவர்களும் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

தேர்தல் முடிவு வரும் நாளான மே 23-ஆம் தேதி அன்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவெடுத்திருக்கும் சோனியா கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு ஏற்கனவே காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் கூட்டணிக் கட்சிகளில் இல்லாத கட்சிகளான தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரா சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

NEXT STORY
மே-23 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் - கடிதம் அனுப்பிய சோனியா காந்தி Description: மே 23-ஆம் தேதி அன்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவெடுத்திருக்கும் சோனியா காந்தி கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles