காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா மாயம்! நேத்ராவதி ஆற்றில் தேடும் பணி தீவிரம்

செய்திகள்
Updated Jul 30, 2019 | 10:25 IST | Times Now

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வி.ஜி.சித்தார்த்தா மாயமாகியுள்ளாா். நேத்ராவதி ஆற்றில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Netravati River
Netravati River  |  Photo Credit: BCCL

பெங்களூர்: கஃபே காபி டே நிறுவனரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா மாயமாகியுள்ளாா். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் கஃபே காபி டே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். காபி டே நிறுவனத்தின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வி.ஜி.சித்தார்த்தா நேற்று இரவு மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது கார் டிரைவர் கூறும்போது, "காரை நேத்ராவதி ஆற்றுப் பாலத்துக்கு ஓட்ட சொன்னாா். அதன்படி அங்கு சென்றேன். காரை பார்க் செய்துவிட்டு காத்திருக்கும்படி கூறியபடி போனில் யாரிடமோ பேசிக்கொண்டே சென்றவர், திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

டிரைவர் கொடுத்த தகவலின்படி போலீசாரும், தீயணைப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தகவல் அறிந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் சிவகுமார், பி.எல்.சங்கர் உள்ளிட்டோர் எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மங்களூர் போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல், சித்தார்த்தா தனது குடும்பத்தினரிடம் சக்லேஷ்பராவுக்கு செல்வதாக கூறியுள்ளாா். ஆனால், மாறாக காரை மங்களூர் நோக்கித் திருப்புமாறு தனது டிரைவரிடம் தெரிவித்துள்ளார். கார் நேத்ராவதி ஆற்று பாலத்தை அடைந்தவுடன் கீழே இறங்கிய அவர், சிறிது தூரம் சென்று காரை நிறுத்திவிட்டு காத்திருக்கும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். அப்போது, தனது மனைவி மற்றும் உறவினர்கள் மற்றும் சிலருடன் அவர் போனில் பேசியுள்ளார்" என்று போலீஸ் கமிஷனர் பாட்டீல் கூறியுள்ளார்.

NEXT STORY
காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா மாயம்! நேத்ராவதி ஆற்றில் தேடும் பணி தீவிரம் Description: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வி.ஜி.சித்தார்த்தா மாயமாகியுள்ளாா். நேத்ராவதி ஆற்றில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...