காங்கிரஸ் ஆதரவு; ஆட்சி அமைக்க உரிமைகோரும் சிவசேனா?

செய்திகள்
Updated Nov 11, 2019 | 19:40 IST | Times Now

சிவசேனா ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Shiv Sena, NCP to form govt; Congress to give outside support, say sources
Shiv Sena, NCP to form govt; Congress to give outside support, say sources  |  Photo Credit: ANI

நடந்துமுடிந்த மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் பாஜக 105 இடங்களும் சிவசேனா 56 இடங்களும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களும் காங்கிரஸ் 44 இடங்களும் கைப்பற்றின.

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை விதித்ததால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் ஆளுநர் பாஜகவை இன்றுக்குள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 

ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக தாங்கள் ஆட்சியமைக்கவில்லை என்று தெரிவித்தது. இந்நிலையில் சிவசேனாவை அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இன்று இரவு 7:30 மணிக்குள் யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்க இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கெடு விடுத்திருந்தார். 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸிடமும் காங்கிரஸிடமும் சிவசேனா ஆதரவு கேட்டது. தேசியவாத காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு அளித்த நிலையில், காங்கிரஸ் தற்போது வெளியில் இருந்து ஆதரவு தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸின் உதவியோடு சிவசேனா ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் காங்கிரஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளிக்கவில்லை. ஆனா அப்படி ஆதரவு அளித்தான், இரு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று 162 இடங்களுடன் சிவசேனா ஆட்சியமைக்கும். இதனால் இத்தனை நாட்களாக மகாராஷ்ட்ராவில் இழுபறியில் இருந்த நிலைமை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 
 

NEXT STORY