ஷீலா திட்சித்தின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

செய்திகள்
Updated Jul 21, 2019 | 17:14 IST | Times Now

ஷீலா தீட்சித்தின் உடல் அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

Sheila Dikshit  funeral cremated at Nigambodh Ghat
Sheila Dikshit funeral cremated at Nigambodh Ghat  |  Photo Credit: ANI

காங்கிரஸ் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்தின் உடல் அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் நேற்று காலை 10.30 மணியளவில் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி 3.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81. 

இன்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைபுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். டெல்லி அரசு இரு தினங்களுக்கு துக்க நாளாக அனுசரிக்கிறது. மோடியைத் தொடர்ந்து, அமித்ஷா, அத்வானி, சுஷ்மா சுவராஜ், ஓபர் அப்துல்லா ஆகிய பா.ஜ.க தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பொதுமக்கள் அஞ்சலிக்காக நிஜாமுதின் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடல் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவர் டெல்லியின் காங்கிரஸ் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் யமுனை நதி ஓரத்தில் உள்ள நிகாம்போத் மயானத்துக்குக் கொண்டுவரப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். 

  •  1938-ஆம் ஆண்டு மார்ச் 31-ல் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் பிறந்தவர் ஷீலா தீட்ஷித்.
  • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.
  • உத்தரப்பிரேதச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக 1984 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷீலா தீட்ஷித்.
  • 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகள் பதவி வகித்தவர்.
  • கடந்த 2014 -ஆம் ஆண்டு சிறிது காலம் கேரள ஆளுநராக பணியாற்றியவர்.
  • கடந்த ஜனவரி 10 ஆம் தேதி டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...