உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதிவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து புதிய நீதிபடியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். வட கிழக்கு மாநிலங்களில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்ற ரஞ்சன் கோகாயின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து, தனது பதிவிக்கு மூத்த நீதிபதியாக உள்ள சரத் அரவிந்த் பாப்டேவை பரிந்துரை செய்தார் ரஞ்சன் கோகாய். இதனை அடுத்து அவரது பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இவர் வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதிவரை பதவிவகிப்பார்.
நாக்பூரின் பிரபல வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீநிவாஸின் மகனான பாப்டே, உச்ச நீதிமன்றத்தில் 21ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர். அடுத்து மும்பையில் உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய பதவிகளில் வகித்தவர், 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.