இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு; 207 பேர் உயிரிழப்பு; 7 பேர் கைது!

செய்திகள்
Updated Apr 21, 2019 | 18:29 IST | Times Now

இலங்கையில் தேவலாயங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்ட பேர் பலியாகியுள்ளனர்.

இலங்கை தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு
இலங்கை தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு  |  Photo Credit: Twitter

இலங்கையில் தேவலாயங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. 400 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இலங்கையில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 6 இடங்களில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளிலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கொழும்புவில் உள்ள தேவலாயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரி பால சிரிசேனா தெரிவித்துள்ளார். ஈவு இரக்கமற்ற இந்த சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், மக்கள் வதந்திகளை நம்பாமல், அமைதி காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டான கட்டுவப்பிடிய தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் தமிழர்கள் வசிக்கும் தேவலாயம் ஒன்றிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியத் தூதரிடம் நிலைமை குறித்து அவ்வப்போது கேட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற காட்டு மிராண்டித் தனமான சம்பவங்களுக்கு இந்த பிராந்தியத்தில் இடமில்லை என்று தனது டிவிட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.

 

 

இலங்கையில் உள்ள இந்தியர்கள்+94777902082, +94772234176, +94112422788, +94112422789 ஆகிய எண்களை உதவிக்காக தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

தொடர் குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இணையதள சேவைகள் மூடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 40 பேரும், நெகோம்போவில் 62 பேரும், பட்டிகலோலாவில் 27 பேரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொடூர தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் 35 வெளிநாட்டவரும் அடக்கம். 

 

 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கையில் நடைபெற்றுள்ள தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தனது வருத்தத்தையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

 

 

 

இலங்கை பிரதமர் ரணில் விங்கரமசிங்கே அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு, இலங்கை முழுவதும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளார். மேலும், அமைதியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

இலங்கையில் டெஹிவாலா ஜூவாலஜிக்கல் கார்டனில் 7வதாக ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர்ந்து 8வது குண்டுவெடிப்பு நிகழ்வும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொழும்பு புறநகரில் உள்ள டெமடகோடா என்ற இடத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. மேலும்,  வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவத்தை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டு தலங்கள், மத தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் 8வதாக வெடித்த குண்டுவெடிப்பு, ஒரு தற்கொலை தாக்குதல் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது.

இத்தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

 

7 பேர் கைது செய்யப்பட்டுள்ள செய்தியை இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜயவர்தன் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

NEXT STORY
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு; 207 பேர் உயிரிழப்பு; 7 பேர் கைது! Description: இலங்கையில் தேவலாயங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்ட பேர் பலியாகியுள்ளனர்.
Loading...
Loading...
Loading...