Election2019: தள்ளாத வயதிலும் தவறாது கடமை ஆற்றிய ‘சீனியர் சிட்டிசன்ஸ்’!

செய்திகள்
Updated Apr 18, 2019 | 17:17 IST | Times Now

சீனியர் சிட்டிசன்களான முதிய வாக்காளர்களும் வாக்களித்துச் செல்வது நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

old citizens
வாக்களித்த முதியவர்கள்  |  Photo Credit: ANI

சென்னை:  இந்தியாவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் மக்களவைக்கான இரண்டாவது கட்ட தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனுடன் இணைந்து சட்டமன்றங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன. 

ஒருபுறம் கோடை வெயில் கொளுத்தி எடுத்தாலும் கூட தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் நோக்கி படையெடுக்கின்றனர். 

ஆனால், அவர்களுக்கு சரிக்குச் சமமாக சீனியர் சிட்டிசன்களான முதிய வாக்காளர்களும் வாக்களித்துச் செல்வது நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர்களில் சிலரின் விவரங்கள் இங்கே உங்களுக்காக...!

 மகாராஷ்டிராவில் 105 வயதான கவய்பாய் கம்ப்ளே என்கிற முதிய பெண்மணி வீல்ச்சேரில் வந்து லத்தூர் தொகுதியின், ஹராங்குல்லில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்துள்ளார்.  

 

 

ஜம்மு காஷ்மீர்ல் 80 வயதான ஜோகிந்த்ரோ தேவி என்கிற வாக்காளர், கத்துவா மாவட்ட மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். பின்னர், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிச் சென்றார். 

 

 

கர்நாடகாவில் 91 வயதான ஸ்ரீநிவாஸ் மற்றும் 84 வயதான மஞ்சுளா ஆகிய தம்பதியினர் ஜெயாநகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

 

 

பீகாரில் 90 வயதான ஊர்மிளா மற்றும் உஷா ஆகிய இரண்டு மூதாட்டிகள் பாகல்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

 

 

மைசூரில் வீரண்ணா ஆரத்யா என்கிற 104 வயதான முதியவர் தனது ஜனநாயக உரிமையை பதிவு செய்துள்ளார். 

veerana

தமிழகத்தில் திமுக பொதுச்செயலாளரும், 96 வயதான மூத்த வாக்காளருமான கே.அன்பழகன் அவர்கள் உடல்நலம் நலிவடைந்த நிலையிலும் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 

 

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே 101 வயது பெரியவரான பெரியசாமி என்பவர் அரசு மரியாதையுடன் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

Old citizen

பெங்களூருவில் 107 வயதான பத்ம விருது பெற்ற மூதாட்டி சாலுமாரதா திம்மக்கா தன்னுடைய வாக்கினைப் பதிவு செய்தார்.

NEXT STORY
Election2019: தள்ளாத வயதிலும் தவறாது கடமை ஆற்றிய ‘சீனியர் சிட்டிசன்ஸ்’! Description: சீனியர் சிட்டிசன்களான முதிய வாக்காளர்களும் வாக்களித்துச் செல்வது நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
Loading...
Loading...
Loading...