பெங்களூர் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல்

செய்திகள்
Updated Jul 23, 2019 | 23:05 IST

கர்நாடகாவில் நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Section 144 imposed in Bengaluru
Section 144 imposed in Bengaluru   |  Photo Credit: ANI

கர்நாடக சட்டப்பேரவையில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அவைக்கு வரக்கூடாது என தடுத்து நிறுத்தி ரேஸ் கோர்ஸ் சாலையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது காங்கிரஸ் - பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கர்நாடகாவில் நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள், பார்கள், மதுபான விடுகளை மூடவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜூலை 25 ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் தடை உத்தரவை  மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெங்களூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

 

 

இதற்கிடையில், கர்நாடக சட்டப்பேரவை வளாகத்திலும் காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவையில்  நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் குமாரசாமி, கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன். பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன். அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் எனது தந்தையின் கட்டாயத்தால் அரசியலுக்குள் நுழைந்தேன். ஊழல் செய்து பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது என உருக்கமாக பேசினார்.

தற்போதைய நிலவரப்படி சட்டப்பேரவையில் மொத்தம் 205 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 107 உறுப்பினர்கள் பாஜகவினருக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் குமாரசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிகிறது.

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...