துபாய் தந்தை தனது மகனுக்கு ரூ. 2600 கோடி மதிப்பில் விமானம் பரிசளித்தாரா?! - உண்மை இதுதான்

செய்திகள்
Updated Aug 27, 2019 | 17:23 IST | Times Now

சவுதியை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகனின் பிறந்தநாளுக்கு ரூ.2600 கோடி மதிப்பிலான 2 விமானங்களை வாங்கித்தந்துள்ளார் என்ற செய்தி தீயாய் பரவியது.

மகனுக்கு 2 விமானங்களை வாங்கி தந்த சவுதி தந்தை, Man audi man accidentally buys 2 planes for his son's birthday
மகனுக்கு 2 விமானங்களை வாங்கி தந்த சவுதி தந்தை  |  Photo Credit: Getty Images

சவுதியை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகனின் பிறந்தநாளுக்கு ரூபாய்.2600 கோடி மதிப்பிலான 2 ஏர்பஸ் விமானங்களை வாங்கித்தந்துள்ளார் என்ற செய்தி தீயாய் பரவியது. ஆனால் அது கிண்டலாக எழுதப்பட்ட செய்தி என்று தற்போது தெரிய வந்துள்ளது. 

முன்பு வெளியான செய்தி இதுதான்: சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் அவரது மகனின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தர முடிவு செய்துள்ளார். தனது மகனுக்கு விமானங்கள் என்றால் பிரியம் என்பதால் அவர் விமான பொம்மைகளை வாங்க ஏர்பஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் ஏர்பஸ் நிறுவனத்தினரிடம் சரியாக உரையாட முடியவில்லை. ஏர்பஸ் நிறுவனத்தினரோ அவர் உண்மையான 2 விமானங்களை வாங்க தங்களை அழைத்துள்ளார் என்று எண்ணி அவரிடம் விமானத்தின் மாடல், வெளிப்புறம் மற்றும் உள்புறத்தின் வடிவமைப்பை பற்றி கேட்டுள்ளனர். அவரோ ஆங்கிலம் புரியாததால் ஏர்பஸ் நிறுவனம்  துல்லியமாக பொம்மை செய்ய தான் கேட்கிறார்களோ என்று எண்ணியுள்ளார். 

பின்னர் அவர் பொம்மை என்று நினைத்து உண்மையான 2 ஏர்பஸ் A350-1000 ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளார். 329 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பு படி கிட்டத்தட்ட ரூபாய் 2600 கோடி மதிப்பிலான அந்த இரு விமானிகளுக்கு தன் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மூலம் பணம் செலுத்தியுள்ளார். அந்த பொம்மை மாடலுக்கு அந்த பணம் கொஞ்சம் அதிகம் என்றாலும் அது நியமானது என்று அவர் எண்ணியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து ஏர்பஸ் நிறுவனங்கள் விமானங்கள் தயாரான பின்பு அவரை அழைத்து யார் இந்த விமானங்களை ஓட்டப்போவது என்று அவரிடம் கேட்டுள்ளனர். முதலில் ஏர்பஸ் நிறுவனம் நகைச்சுவைக்காக கேட்பதாக நினைத்த சவுதி தந்தைக்கு, பொம்மை மாடலுக்கு பதிலாக உண்மையான 2 விமானங்களை வங்கியுள்ளோம் என்று பிறகு தான் புரியவந்துள்ளது. 

பின்னர் அவர் அந்த 2 விமானங்களில் ஒன்றை தன் மகனுக்கு பரிசாக கொடுத்துவிட்டு மற்றொன்றை தன் உறவினருக்கு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இந்த செய்தி பெரும் வைரல் ஆகியுள்ளது. மேலும் இவ்வளவு விலையுயர்ந்த பிறந்தநாள் பரிசை தந்த ஒரே தந்தை இவராக தான் இருப்பார் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை Thin Air Today  என்ற  செய்தி நிறுவனம் முதன்முதலில் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் விமானப் பயணம் குறித்து வேடிக்கையான செய்திகளை உருவாக்கி எழுதும் ஒரு தளமாகும். இந்த செய்தியையும் அப்படிதான் அவர்கள் பொய்யாக எழுதியது தெரிய வந்துள்ளது.   

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...