[வீடியோ] சவுதி அரேபியாவில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 35 பேர் உடல் கருகி பலி

செய்திகள்
Updated Oct 17, 2019 | 13:36 IST | Times Now

முதல்கட்ட விசாரணையில் பேருந்தில் பயணித்தவர்கள் வெளிநாட்டினர் என்பதும், இவர்கள் ஆசிய மற்றும் அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் புனித யாத்திரைக்காக வந்திருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

Saudi Arabia bus fire accident 35 foreigners dead
Saudi Arabia bus fire accident 35 foreigners dead  |  Photo Credit: Twitter

நேற்று மாலை சவுதி அரேபியாவில் பேருந்து தீப்பிடித்து உள்ளே இருந்த 35 பேரு உடல் கருகி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை, சவுதி அரேபியாவில் ஹஸ்ரா சாலையில், 39 பேருடன் புனித தலமான மதினாவுக்கு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியில் திடீரென்று பேருந்து மோதி தீப்பிடிக்கத் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கூற, தீயணைப்பு வண்டி வந்து தீயை அணைக்கப் போராடியது. 

 

 

இருப்பினும், பேருந்து முழுவதும் தீ பரவி இருந்ததால் உள்ளே கத்தி கூச்சலிட்டவர்களை காப்பற்ற முடியவில்லை. இதில் 35 பேர் பேருந்து உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பந்தமாக சவுதி அரேபிய அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. 

முதல்கட்ட விசாரணையில் பேருந்தில் பயணித்தவர்கள் வெளிநாட்டினர் என்பதும், இவர்கள் ஆசிய மற்றும் அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் புனித யாத்திரைக்காக வந்திருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 
 

NEXT STORY