பாகிஸ்தானில் இருந்து சம்ஜவுதா விரைவு ரயில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது

செய்திகள்
Updated Aug 08, 2019 | 19:14 IST | Times Now

சுமார் 110 பயணிகளுடன் சம்ஜவுதா விரைவு ரயில் பஞ்சாப் மாநிலம் அட்டாரிக்கு மாலை 5:10 மணிக்கு வந்து சேர்ந்தது.

Samjhauta Express arrives at Attari
சம்ஜவுதா விரைவு ரயில் ஜூலை 22, 1976 முதல் இயக்கப்பட்டு வருகிறது  |  Photo Credit: ANI

இந்தியாவிற்கான ரயில் சேவையை பாகிஸ்தான் திடீரென நிறுத்தியதையடுத்து இந்திய ரயில்வே குழு சம்ஜவுதா விரைவு ரயிலை மீட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ள நிலையில் சம்ஜவுதா விரைவு ரயில் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. அட்டாரி ரயில் நிலைய மேற்பார்வையாளர் அர்விந்த் குமார் கூறும்போது இந்தியாவிற்கு சம்ஜவுதா விரைவு ரயிலை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் மறுத்துவிட்டது என்றும் இந்தியா தனது ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரை அனுப்பி ரயிலை எடுத்துச்செல்லலாம் என்று பாகிஸ்தான் கூறியதாகவும் தெரிவித்தார் இதனை அடுத்து சுமார் 110 பயணிகளுடன் சம்ஜவுதா விரைவு ரயில் பஞ்சாப் மாநிலம் அட்டாரிக்கு மாலை 5:10 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் சென்ற இந்திய ரயில்வே குழு ரயிலை மீட்டுள்ளனர்.

இது குறித்து வடக்கு ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், ”ரயில் சேவை நிறுத்தப்படவில்லை; அது தொடர்ந்து இயங்கும். பாகிஸ்தான் அதிகாரிகள் சிலர் தங்கள் நாட்டு ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பினர். நம் பகுதியில் இயல்பான சூழ்நிலையே நிலவுவதாக தெரிவித்துள்ளோம். நம் குழுவினர் நமது எஞ்சினை அட்டாரிக்கு கொண்டு சேர்த்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் செல்ல 70 பயணிகள் இந்தியாவில் காத்திருக்கின்றனர். சம்ஜவுதா விரைவு ரயில் அட்டாரி ரயில் நிலையம் வந்தடைந்ததும் அங்கு, லாகூரிலிருந்து டெல்லி செல்லவிருக்கும் பயணிகள் இந்திய ரயிலிலும், லாகூர் செல்லவிருக்கும் பயணிகள் பாகிஸ்தான் ரயிலிலும் மாறிக்கொண்டு பயணிக்கின்றனர். இந்திய எஞ்சின் பொறுத்தப்பட்ட அந்த ரயில் தற்போது இந்திய குழுவினருடன் அட்டாரிக்கு வந்தடைந்தது.’’ என்று கூறினார். 

1971இல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சிம்லா ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்ஜவுதா விரைவு ரயில் ஜூலை 22, 1976 முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஆறு படுக்கை பெட்டிகளும் ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
பாகிஸ்தானில் இருந்து சம்ஜவுதா விரைவு ரயில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது Description: சுமார் 110 பயணிகளுடன் சம்ஜவுதா விரைவு ரயில் பஞ்சாப் மாநிலம் அட்டாரிக்கு மாலை 5:10 மணிக்கு வந்து சேர்ந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...