சபரிமலை வழக்கு: பெரிய அமர்வுக்கு மாற்றம்

செய்திகள்
Updated Nov 14, 2019 | 11:10 IST | Times Now

இதனால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம். 

Sabarimala verdict: Supreme Court refers matter to larger 7-judge bench
Sabarimala verdict: Supreme Court refers matter to larger 7-judge bench  |  Photo Credit: IANS

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சபரிமலை கோவிலுக்குள் அனைத்துப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை ஏற்ற உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு இன்று தீர்ப்பு வழங்குதாக அறிவித்திருந்தது.

இன்று காலை 10:30 மணி அளவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா, ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எப்படி மற்ற மதவழிபாட்டு இடங்களில் பெண்கள் நுழையும் விவகாரம் பேசப்படுமோ அதேபோலதான் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவதும் என்று தீர்ப்பை தொடங்கினார். பின் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை ஆர்.எஃப்.நாரிமன் தள்ளுபடி செய்தார். இதனால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம். 

 இவ்வாறு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இந்த மனுக்களின் விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு கொண்டு செல்ல பரிந்துரையும் வழங்கியுள்ளது. இதனால் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் இருந்து இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது. இந்த 7 பேர் பெஞ்சில்  ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்ஹோத்ராவும் இடம்பெறுவர். அதுவரை சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடை இல்லை.

தீர்ப்பு காரணமாக சென்ற வருடம் சபரிமலையில் கலவரம் வெடித்ததால் இன்று பந்தளம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வருகை புரிய இருப்பதால் இந்த வருடமும் இந்து அமைப்புகள் போராட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 

NEXT STORY