சபரிமலைக்குச் செல்ல பெண்கள் முன்பதிவு; நாளை நடை திறப்பு போலீஸ் குவிப்பு!

செய்திகள்
Updated Nov 15, 2019 | 11:25 IST | Times Now

நாளை சபரிமலை நடை திறக்க இருப்பதால் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

sabarimala
sabarimala  |  Photo Credit: Twitter

 

நாளை சபரிமலை நடை திறக்க இருப்பதால் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் ஐய்யப்ப பக்தர்கள் கார்த்திகை, மார்கழி மாத சமயத்தில் சபரிமலை கோயிலுக்கு மாலையிட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு இடுமுடி கட்டி பாதயாத்திரை செல்வார்கள். சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுவரை பெண்கள் நுழைய அனுமதி இல்லை.

ஆனால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சபரிமலை கோவிலுக்குள் அனைத்துப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் வழக்கை பெரிய அமர்வுக்கு மற்றியதோடு தீர்ப்பு வரும்வரை பெண்கள் கோவிலுக்கு செல்ல தடை இல்லை என கூறியது.

சென்ற வருடம் தீர்ப்பு வந்தவுடன் சபரிமலை சீசன் தொடங்கியபோது பல பெண்கள் கோவிலுக்குள் செல்ல முற்பட்டபோது பல கலவரங்கள் வெடித்தன. அதையும் மீறி 3 பெண்கள் உள்ளே சென்று வந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் நாளை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. 

சுமார் இரண்டு மாதங்களும் திறந்திருக்கும் கோவில் ஜனவரி 15ஆம் தேதி அன்று மீண்டும் சாத்தப்படும். இந்த நாட்களில் வழிபாடு நடத்த இதுவரை 40க்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் சென்ற வருடம் ஏற்பட்டதுபோல கலவரம் ஏதும் நிகழாமல் இருக்க பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

NEXT STORY