மக்களவைத் தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3,500 கோடி மதிப்பிலான பணம், மதுபானம்

செய்திகள்
Updated May 20, 2019 | 09:55 IST | Times Now

மக்களவைத் தேர்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பணம், தங்கம், மதுபானம் ஆகியவற்றின் மதிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Rs 3,449 crore seized during 2019 Lok Sabha elections
Rs 3,449 crore seized during 2019 Lok Sabha elections  |  Photo Credit: Facebook

டெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடந்த சோதனையில் ரூ.3,449 கோடி மதிப்பிலான பணம், மதுபானம், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நேற்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இறுதிக் கட்டத் தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. 

இத்தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ. 3,449 கோடி மதிப்பிலான பணம், மதுபானம், போதைப் பொருள்கள் தங்கம், வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் ஒட்டு மொத்தமாக ரூ.1,206 கோடி மதிப்பிலான பணம், தங்கம், மதுபானம், விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதைக்காட்டிலும் இந்தத் தேர்தலின் போது நடந்த சோதனையில் 3 மடங்கு அதிகமாக தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 10-ம் தேதி முதல் மே-19 வரை ரூ.893 கோடி பணம், ரூ.294.41 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.1270.37 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 986.76 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இவை தவிர மற்ற பொருட்கள் ரூ.58.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் திலீப் சர்மா தெரிவித்துள்ளார். 

NEXT STORY
மக்களவைத் தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3,500 கோடி மதிப்பிலான பணம், மதுபானம் Description: மக்களவைத் தேர்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பணம், தங்கம், மதுபானம் ஆகியவற்றின் மதிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!