’விமன் இன் ப்ளூ அண்ட் யெல்லோ’ - இணையத்தை கலக்கும் இரண்டு பெண் தேர்தல் அதிகாரிகள்!

செய்திகள்
Updated May 14, 2019 | 17:42 IST | Times Now

ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் இத்தேர்தலின்போது இரண்டு பெண்கள் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகியுள்ளனர்.

election 2019, தேர்தல் 2019
ரீனா மற்றும் யோகேஷ்வரி  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் இத்தேர்தலின்போது இரண்டு பெண்கள் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகியுள்ளனர்.

ஒருவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர். பெயர் ரீனா திவேதி. உத்திர பிரதேச மாநிலப் பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் அரசு ஊழியர் இவர். 

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 5வது கட்ட வாக்குப்பதிவின்போது லக்னோவில் அமைந்திருந்த வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அழகான தோற்றத்துடன் மஞ்சள் நிற சேலையில் இவர் வாக்குப்பதிவு இயந்திரப்பெட்டியை சுமந்துவரும் புகைப்படத்தைதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 35 வயதான இந்த அதிகாரி, ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும்தான் தனது இந்த ஸ்டைலிஷ் லுக்கிற்கு காரணம் என்கிறார்.

ரீனாவைப் போன்றே பிரபலமாகியுள்ள மற்றொருவர் யோகேஷ்வரி கோகித். மத்திய பிரதேசம், போபாலின் கோவிந்தபுரா ஐஐடியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் 6வது கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார் இவர். நீல நிற உடையுடன் ஸ்டைலாக வாக்குப்பெட்டியுடன் இவர் நடந்துவரும் புகைப்படமும் வைரலாகி வருகின்றது. கனரா வங்கியில் பணியாற்றுகிறார் இவர். 

நாகரீக உடையுடன் அழகாக தோற்றமளித்த இவர்கள் இருவருமே, தேர்தல் பணிகளிலும் மிகச் சரியாக நடந்து கொண்டதே மேலும் பிரபலமடைந்ததுக்கு காரணம் என்கின்றனர் சோஷியல் மீடியாவாசிகள். ஒருபக்கம் வைரலாகினாலும், மறுபக்கம் வழக்கம்போல இவர்களது உடைகள் குறித்த விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இருவருமே ‘உடைகளை வைத்து ஒரு பெண்ணை தீர்மானிப்பது தவறானது’ என்று எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
’விமன் இன் ப்ளூ அண்ட் யெல்லோ’ - இணையத்தை கலக்கும் இரண்டு பெண் தேர்தல் அதிகாரிகள்! Description: ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் இத்தேர்தலின்போது இரண்டு பெண்கள் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகியுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles