நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயார் - சோனியா காந்தி உருக்கம்

செய்திகள்
Updated May 27, 2019 | 10:27 IST | Times Now

ரேபரேலி: நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்ய தயார் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

UPA chairperson Sonia Gandhi
UPA chairperson Sonia Gandhi  |  Photo Credit: Times Now

ரேபரேலி: நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்ய தயார் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியை தழுவியுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், "நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கவும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் நான் பெற்ற எதையும் தியாகம் செய்ய தயார். அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். இனிவரும் காலங்கள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனினும், உங்களது ஆதரவால் காங்கிரஸ் கட்சி அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அனைத்து மக்களவைத் தேர்தலை போல இந்த தேர்தலிலும் நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். உங்கள் முன்னால் எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நீங்கள் தான் என் குடும்பம். உங்களிடம் இருந்துதான் சக்தியை பெறுகிறேன். நீங்கள் தான் எனது உண்மையான சொத்து. ரேபரேலி தொகுதி வாக்காளர்கள், காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாத சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

NEXT STORY
நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயார் - சோனியா காந்தி உருக்கம் Description: ரேபரேலி: நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்ய தயார் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!