விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

செய்திகள்
Updated Sep 12, 2019 | 17:07 IST | Times Now

18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளுக்கு 60 வயது நிரம்பிய பின்னர் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Prime Minister Narendra Modi, பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி  |  Photo Credit: ANI

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் பல்வேறு அரசு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளுக்கு 60 வயது நிரம்பிய பின்னர் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1,16,183 விவசாயிகள் இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, சிறு, குறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பிரதான் மந்திரி லகு வியாபாரிக் மாந்தன் யோஜனா மற்றும் சுவரோஜ்கார் ஓய்வூதியத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய ஜார்க்கண்ட் சட்டமன்ற கட்டிடத்தையும் சாஹிப்கஞ்ச் நகரில் பல்போக்குவரத்து முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பழங்குடியின சிறுவர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 462 ஏக்கரில் மாதிரி பள்ளிகளையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவற்றில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் உள்ள 69 பள்ளிகளும் அடங்கும்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுவர் தாஸ், ஆளுநர் திரௌபதி முர்மூ மற்றும் மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...