மே 30ம் தேதி பதவியேற்கும் பிரதமர் மோடி - ரஜினி, கமல் கலந்து கொள்கிறார்களா?

செய்திகள்
Updated May 27, 2019 | 14:51 IST | Times Now

வருகின்ற மே 30ம் தேதியன்று இரவு ஏழுமணியளவில் குடியரசுத்தலைவர் தலைமையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கிறார்.

india, இந்தியா
ரஜினியுடன் கமல்  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக கட்சியின் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

வருகின்ற மே 30ம் தேதியன்று இரவு ஏழுமணியளவில் குடியரசுத்தலைவர் தலைமையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு நட்பு ரீதியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும், ‘தர்பார்’ திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக இன்று மும்பை செல்லும் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும் 30ம் தேதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முறையாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். ஆனால், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NEXT STORY
மே 30ம் தேதி பதவியேற்கும் பிரதமர் மோடி - ரஜினி, கமல் கலந்து கொள்கிறார்களா? Description: வருகின்ற மே 30ம் தேதியன்று இரவு ஏழுமணியளவில் குடியரசுத்தலைவர் தலைமையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது; 2 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் அபாயம்!
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்
 பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
பெட்ரோல், டீசல் விலை 6 ரூபாய் வரை உயரலாம்!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம்  0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் அதிகரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!
[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!