மிஸ் இந்தியா 2019-ராஜஸ்தானின் சுமன் ராய் பட்டத்தை தட்டிச் சென்றார்!

செய்திகள்
Updated Jun 16, 2019 | 15:12 IST | Times Now

சுமன் ராவ், தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியில் சுமன் ராவ் பங்கேற்க உள்ளார். 

india, இந்தியா
மிஸ் இந்தியா சுமன் ராய்  |  Photo Credit: Twitter

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா போட்டியில், ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

2019ம் ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர், பாலிவுட் நடிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

 

இந்நிலையில், இறுதிச்சுற்றில் நடுவர்களின் தேர்வின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான சுமன் ராவ் என்கிற மாடல் அழகி, மிஸ் இந்தியா 2019 வெற்றியாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சுமன் ராவ், தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியில் சுமன் ராவ் பங்கேற்க உள்ளார். 

மிஸ் இந்தியா போட்டியில் தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா விஜ் என்கிற அழகி மிஸ் இந்தியா ரன்னர் அப் ஆக தேர்வு பெற்றுள்ளார். பீகாரைச் சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைடெட், சட்டீஸ்கரின் ஷிவானி மிஸ் கிராண்ட் இந்தியா ஆகிய பட்டங்களைத் தட்டிச் சென்றுள்ளனர்.

NEXT STORY
மிஸ் இந்தியா 2019-ராஜஸ்தானின் சுமன் ராய் பட்டத்தை தட்டிச் சென்றார்! Description: சுமன் ராவ், தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியில் சுமன் ராவ் பங்கேற்க உள்ளார். 
Loading...
Loading...
Loading...