ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு!

செய்திகள்
Updated Sep 18, 2019 | 18:58 IST | Times Now

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்,railway employees receive 78 days productivity-linked bonus
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்  |  Photo Credit: BCCL

புதுடெல்லி: இந்திய ரெயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.        

இன்று  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் இந்திய ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு (2018-2019) 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூபாய் 2,024 கோடி செலவிடவுள்ளது. இதன் மூலம் 11,52,000 ரயில்வே ஊழியர்கள் நேரடியாக பலனடைகிறார்கள். ஊழியர்களுக்கு தங்கள் படிநிலைக்கேற்ப கிட்டத்தட்ட ரூ.7000 முதல் ரூ.18000 வரை வழங்கப்படவுள்ளது.    

ரயில்வே துறை ஊழியர்களுக்கு தங்கள் உற்பத்தி மற்றும் சேவைக்கேற்ப போனஸ் வழங்கும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதன் படி தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த ஆண்டு போனஸ் வழங்கியுள்ளதை பற்றி கூறுகையில் ரெயில்வேயில் பணியாற்றும் 11 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும், இது அவர்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் தெரிவித்தார். 

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ரயில்வே ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரயில்வே துறை ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு கூட இதே போல் 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.     


     

NEXT STORY